
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
நியூசிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் இது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியாகும். நல்ல ரன் ரேட் உடன் 6 புள்ளிகள் பெற்று தற்பொழுது நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டிக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்ப வந்தார்.
நியூசிலாந்து அணிக்கு திரும்ப வந்த ஸ்கேன் வில்லியம்சன் பேட்டிங்கில் 78 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நிலையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பெவிலியனுக்கு திரும்பினார். மேற்கொண்டு களத்தில் நின்ற டேரில் மிட்சல் அதிரடியாக 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்து அசத்தினார்.