கரோனா தொற்றிலிருந்து மனதை திசை திருப்புவது மிகவும் கடினமானது - வருண் சக்கரவர்த்தி!
கரோனா தொற்றால் ஏற்படும் மன கசப்பியிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமானது என இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொல்கத்தா நைட் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த வருண் சக்ரவர்த்திக்கு கரோனா தொற்று உறுதியானது.
அவரைத் தொடர்ந்து சிஎஸ்கேவின் மைக் ஹஸ்ஸி, எல்.பாலாஜி ஆகியோருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சஹாவிற்கும் தொற்று உறுதியானதை அடுத்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
Trending
இந்நிலையில் தொற்றிலிருந்து மீண்டுள்ள வருண் சக்ரவர்த்தி, கரோனா தொற்றினால் ஏற்படும் கவலையிலிருந்து மனதை திசை திருப்புவது கடினமான ஒன்று என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில்,“கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிறகு கடினமான விஷயம் என்னவென்றால், உங்கள் மனதை திசை திருப்பி, நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். நீங்கள் தனியாக இருப்பதால், உங்கள் குடும்பத்தினர் குறித்து, நண்பர்கள் குறித்த கவலைகளும் அதிகரித்து இருக்கும்.
இதிலிருந்து மீள்வதற்கு ஓஷோவின் புத்தகங்களைப் படித்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இருப்பினும் கரோனா தொற்றால் ஏற்பட்ட கவலையிலிருந்து நான் மீண்டும் வரவில்லை. அதேசமயம், வாசனை மற்றும் சுவை இழப்பு எனக்குள்ளது. இருப்பினும் நான் மீண்டும் பயிற்சிக்கு திரும்பி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now