Advertisement

தொடர் முழுவது எங்களுக்கு சவால் அளித்துள்ளனர், அவர்களை மதிக்கிறோம் - சிஎஸ்கே போட்டி குறித்து ரிக்கி பாண்டிங்!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்  தெரிவித்துள்ளார்.

Advertisement
Tournament For 'Confident' Delhi Capitals Starts Now: Ricky Ponting
Tournament For 'Confident' Delhi Capitals Starts Now: Ricky Ponting (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 10, 2021 • 11:47 AM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் புள்ளிப்பட்டியலின் முதலிரு இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 10, 2021 • 11:47 AM

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல்தகுதி சுற்றில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்த விதம் சற்று ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் நான் அதை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. ஏனென்றால் அது நல்ல வி‌ஷயமென்று நான் நினைக்கிறேன்.அந்த தோல்வி இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாட்டை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று டெல்லி அணி வீரர்கள் சிந்திக்க ஒரு வாய்ப்பு அளிக்கும். தோல்வியை மறந்துவிட்டு அடுத்த போட்டியில் கவனத்தை செலுத்த தொடங்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை பார்த்தால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் மும்பைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அப்போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றோம். அந்த ஆட்டங்களை விட இன்று நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். அதை நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் 2 முறை வீழ்த்தி இருக்கிறோம்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை. எனவே எங்களுக்கான சவால் இப்போதுதான் தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம். சென்னை அணியும் பலம் வாய்ந்ததாகும். அவர்கள் தொடர் முழுவதும் புள்ளிகள் பட்டியலில் எங்களோடு சமநிலையாக இருந்தனர்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement