அற்புதமான கேட்ச்சின் மூலம் டிராவிஸ் ஹெட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பென் டக்கெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 165 ரன்களையும், ஜோ ரூட் 68 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா, மார்னஸ் லபுஷாக்னே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ஒரு பவுண்டரியும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்திலேயே டிரேவிஸ் ஹெட் பவுலர் தலைக்கு மேல் பவுண்டரி அடிக்க நினைத்து நேராக ஒரு ஷாட்டை விளையாடினார்.
பந்து வந்த வேகத்தைக் கருத்தில் கொண்டு, பொதுவாக பந்து வீச்சாளர் அதைத் தடுக்கக்கூட முயற்சிக்க மாட்டார், ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதைப் பிடித்தது மட்டுமல்லாமல், ஒரு அற்புதமான கேட்சையும் கைப்பற்றி அசத்தினார். இது டிராவிஸ் ஹெட் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jofra Archer takes down Travis Head, and Australia is in trouble early onChampionsTrophyOnJioStar , LIVE NOW on Star Sports 2, Sports 18-1 amp; JioHotstarpic.twitter.com/mBy0HsfMUJ
— Star Sports (StarSportsIndia) February 22, 2025Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 6 ரன்னிலு, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்னிலும் விக்கெட்டை இழக்க பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் - மார்னஸ் லபுஷாக்னே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய லபுஷாக்னே 47 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்கள் எடுத்திருந்த கையோடு மேத்யூ ஷார்ட்டும் விக்கெட்டை இழந்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now