
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3இல் வெற்றி பெற்று 3ஆம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இத்தொடர் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்ததாக, ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்டுகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இரு டெஸ்டுகளும் நவம்பர் 30, டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இரு தொடர்களுக்குமான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.