
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பென்னி துவர்ஷியஸும், இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் அறிமுக வீரராக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின்னர் 17 ரன்கள் எடுத்திருந்தந் இலையில் பில் சால்ட் விக்கெட்டை இழந்தார். அதன்பின் டக்கெட்டுடன் இணைந்த வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.