
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தங்களுக்கு உள்ள ஒருநாள் தொடர்களில் சிறப்பாக விளையாடி அணியை கட்டமைக்க அனைத்து அணி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு 18 பேர் கொண்ட முதன்மை அணியை அறிவித்துள்ளது. இந்த முதன்மை அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணி யுஏஇ-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.