அடுத்தடுத்து தொடரிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்கள்; விண்டீஸுக்கு கடும் பின்னடைவு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் மூவர் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று பார்போடாஸிலுள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Trending
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அச்செய்தியாதெனில் அணியின் நட்சத்திர வீரர்களான ஷிம்ரான் ஹெட்மையர், கீமோ பால், குடாகேஷ் மோட்டி ஆகியோர் திடீரென தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதில் ஷிம்ரான் ஹெட்மையர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகினார். அதேசமயம் கீமா பால் மற்றும் குடாகேஷ் மோட்டி ஆகியோர் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக ஜெர்மைன் பிளாக்வுட், யானிக் கரியா, ஓடியன் ஸ்மித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இருப்பினும் தொடருக்கு முன்னதாகவே நட்சத்திர வீரர்கள் அணியிலிருந்து விலகியது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now