
‘Trying to get Tendulkar’s record of 100 tons’ – Brad Hogg (Image Source: Google)
டி20 இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் போன்ற பதவிகளில் இருந்து விராட் கோலி விலகிவுள்ளார். கேப்டன் பதவிகளில் இருந்து விலகினாலும் வீரராக அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள், ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் என மொத்தம் 70 சதங்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், கேப்டன் பதவியை உதறியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் அடிக்கும் சாதனையை சமன்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.