
Twitter removes blue verified badge from MS Dhoni's account (Image Source: Google)
உலகம் முழுவதும் உள்ள முக்கிய நபர்களின் பெயர்களில் போலி டிவிட்டர் கணக்குகள் உருவாக்கி தவறான செயல்களுக்கு பயன்படுத்த கூடாது என்ற காரணத்தால் முக்கிய நபர்களுக்கு அதிகாரப்பூர்வ கணக்காக நீல நிற பேட்ஜ் அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த கேப்டனாக இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனியின் கணக்கிலிருந்த ப்ளூ பேட்ஜ் நீக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணத்தை டிவிட்டர் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தோனி, தனது டிவிட்டர் பக்கத்தில் கடைசியாக இந்தாண்டு ஜனவரி 8ஆம் தேதி பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.