IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

two-indian-cricket-players-found-covid-19-positive-in-england (Image Source: Google)
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சக வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினரிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News