Advertisement

யு19 ஆசிய கோப்பை 2023: யுஏஇ-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேசம்!

யுஏஇ யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச யு19 அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற சாதனைப்படைத்தது.

Advertisement
யு19 ஆசிய கோப்பை 2023: யுஏஇ-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேசம்!
யு19 ஆசிய கோப்பை 2023: யுஏஇ-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேசம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 17, 2023 • 08:15 PM

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் துபாயில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 17, 2023 • 08:15 PM

இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவையும், யுஏஇ அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. 

Trending

இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி மற்றும் ஜிஷான் ஆலம் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜிஷான் ஆலம் 7 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய ரிஸ்வான் - ரஹ்மான் ஷிப்லி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரிஸ்வான் 60 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய அரிபுல் இஸ்லாம் 50 ரன்கள், அஹ்ரார் அமீன் 5 ரன்கள், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி சதம் அடித்து அசத்தியதுடன் 129 ரன்களைச் சேர்த்தார். இதன்முலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. யுஏஇ அணி தரப்பில் அய்மான் அஹ்மெத் 4 விக்கெட்டுகளையும், ஒமித் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி வங்கதேச வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே அடித்தது.யுஏஇ அணி தரப்பில் அதிகபட்சமாக துருவ் பராசரர் 25 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக மருqப் மிருதா மற்றும் ரோஹனத் போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் வங்கதேச யு19 அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ யு19 அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement