
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அண்டர்19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் மற்றும் ஷாசீப் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கான் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த ஷாசீப் கான் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஹரூன் அர்ஷத் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய முகமது ரியாசுல்லாஹ் 27 ரன்களிலும், ஃபர்ஹான் யூசுஃப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்த் சமர்த் நாகராஜ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஃபஹம் உல் ஹக் 4 ரன்களுக்கும், கேப்டன் சாத் பெய்க் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.