
U19 Asia Cup: Raj Bawa puts up spirited show but Pakistan defeat India in nail-biter (Image Source: Google)
அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 19 அணி, பாகிஸ்தான் அண்டர் 19 அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 40 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்னூர் சிங் - ஆராத்யா யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஹர்னூர் சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கு வாய்ப்பை தவறவிட, ஆராத்யா யாதவ் அரைசதம் கடந்தார்.