மகளிர் யு19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இன்று நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Trending
இதையடுத்து இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை கிரேஸ் 20 ரன்களும், பின்வரிசையில் அலெக்ஸா ஸ்டோன்ஹௌஸ் 25 ரன்களும் அடித்தனர்.
அதன்பின் 9ஆம் வரிசையில் இறங்கிய ஜோஸி க்ரௌவ்ஸ் 15 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதன்பின் 100 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 18.4 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹன்னா பேக்கர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் இங்கிலாந்து யு19 மகளிர் அணி 3 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய யு19 மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதையடுத்து வரும் 29ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now