Advertisement

செப்டம்பரில் ஐபிஎல் தொடர்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 26, 2021 • 18:32 PM
UAE Likely To Host Remainder Of IPL 2021 Matches, Decision To Be Taken On May 29
UAE Likely To Host Remainder Of IPL 2021 Matches, Decision To Be Taken On May 29 (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14 வது சீசினில் பல்வேறு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்தி வவைக்கும் முடிவை எடுத்த பிசிசிஐ, எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்மரம் காட்டி வந்தது.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தகவலானது, ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது என்பதுதான். பிசிசிஐயின் இந்த முடிவை ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளின் நிர்வாகங்களும் உறுதி செய்திருக்கின்றன. அதன்படி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் முதல் போட்டியானது ஐக்கிய அமீரகத்தில், செப்டம்பர் மாதம் 19 அல்லது 20ஆம் தேதிக்குள்ளாக தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Trending


அதேபோல் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியானது அக்டோபர் மாதம்10ஆம் தேதி நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. குறுகிய கால இடைவெளிகளில் 31 போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும், டபுள் ஹெட்டர்ஸ் நாட்கள் 10 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் ஒரே போட்டி மட்டுமே கொண்ட நாட்களாக அமையும் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

அதேபோல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் முடிந்த பின்னர் அந்நாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கு பெற ஐக்கிய அமீரகம் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement