
UAE restricted Ireland by 150 runs (Image Source: Google)
அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப் போட்டி இன்று அல் அம்ரீட்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பால் ஸ்டிர்லிங், மெக்பிரையன், கரெத் டெலானி என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ஹேரி டெக்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தார். பின் அரைசதம் கடந்த கையோடி ஹேரி டெக்டரும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் தடுமாறினர்.