UAE vs WI, 2nd ODI: யுஏஇக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்து விண்டீஸ்!
யுஏஇக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அண் 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய பிர்ண்டன் கிங் மற்றும் சார்லஸ் அருமையாம தொடக்க அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
Trending
இதில் பிரண்டன் கிங் 64 ரன்னும், சார்லஸ் 63 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய ப்ரூக்ஸ் 20 ரன்களிலும், கேசி கார்டி 32 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 7 ரன்களிலும், கேப்டன் ஷாய் ஹோப் 23 ரன்னிலும், ஹாட்ஜ் 26 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யுஏஇ அணி தரப்பில் ஜாகூர் கான் 3 விக்கெட்டும், அலி நசீர், சன்சித் சர்மா, அப்சல் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி விளையாடி வருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now