Advertisement
Advertisement
Advertisement

UAE v WI, 3rd ODI: யுஏஇ-யை வைட் வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றினர்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 10, 2023 • 14:51 PM
UAE Vs WI: Athanaze Smashes Joint-Fastest Fifty On ODI Debut, Equals Krunal's Record
UAE Vs WI: Athanaze Smashes Joint-Fastest Fifty On ODI Debut, Equals Krunal's Record (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிக் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லவ்ப்ரீத் சிங் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது வாசீம் - அவிந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வசீம் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Trending


இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அரவிந்த் அரைசதம் கடந்த நிலையில், 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு  நடையைக் கட்டினர். இதனால் 36.1 ஓவர்களிலேயே ஐக்கிய அரபு அமீரக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த அலிக் அத்தானாஸ் - ஷமாரா ப்ரூக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அத்தானாஸ் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 65 ரன்களில் அத்தானாஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 39 ரன்களில் ஷமாரா ப்ரூக்ஸும் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த கேசி கார்டி 20, ரோஸ்டன் சேஸ் 27, கெவின் ஹோட்ஜ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ரோவ்மன் ரெய்பர் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக கெவின் சின்க்ளரும், தொடர் நாயகனாக பிராண்டன் கிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.   


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement