 
                                                    
                                                        Umesh Yadav, Shreyas Iyer and Shahbaz Ahmed added to India’s squad (Image Source: Google)                                                    
                                                இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் ஹூடா இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்.
அதே போல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் விளையாடவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிப்போர்ட் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் இதில் பங்கேற்கவில்லை.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        