
ஐபிஎல் 2022 தொடர் மே 29ஆம் தேதி முடிவடைந்த பிறகு ஜூன் 9 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிறது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ,கே.எல்.ராகுல் ,பும்ரா ,ரிஷாப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கடும் களைப்பில் இருப்பார்கள், மேலும் பயோ பபுள் என்ற ஒரு கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதென்பது மன உளைச்சலுக்கான தருணமாகும்.
இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.