SA vs NED, 2nd ODI: பவுமா, மார்க்ரம் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அவர்களது அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதில் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Trending
அவரைத் தொடர்ந்து 18 ரன்களை எடுத்திருந்த விக்ரம்ஜித் சிங் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முசா அஹ்மதும் 17 ரன்களுக்கும், பரெசி 7 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதனைத்தொடர்ந்து ஒருபக்கம், டேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தது.
இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேஜா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிசாண்டா மகாலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டி காக் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த வந்த ரஸ்ஸி வேண்டர் டுசெனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இதற்கிடையில் டெம்பா பவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டுசென் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெம்பா பவுமா 90 ரன்களுடனும், ஐடன் மார்க்ரம் 51 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதமூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தியதில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now