
Uncapped James Bracey, Ollie Robinson named in England squad for New Zealand Tests (Image Source: Google)
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதையடுத்து கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இங்கிலாந்திற்கு சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெறவில்லை.