
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்ற புதிய பயணத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்த முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து விளையாடியது.
92 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த தடுமாறியது. பிறகு அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்த அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சிலும் வில்லியம்சன், வில் யங், டாம் லாத்தம், கான்வே உள்ளிட்ட வீரர்கள் சொதப்பினர்.