ஒருசில போட்டியை வைத்து குறைத்து மதிப்பிடாதீர் - ரவீந்திர ஜடேஜா!
வெறும் இரண்டு போட்டிகளை வைத்து எங்கள் திறமையை சந்தேகப்படுவது நியாமில்லை என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது இந்திய அணிக்கு சற்று மோசமாகவே துவங்கியது என்றே கூறலாம். ஏனெனில் இந்த உலக கோப்பை தொடரின் முதல் 2 போட்டிகளிலும் படு மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது கடைசியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது ரன் ரேட்டிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் முடிவின் படியே இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா ? செல்லாதா ? என்கிற தெளிவு கிடைக்கும். ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறும்.
Trending
கடைசியாக நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி சுற்றில் நுழைய வாய்ப்பு குறைவுதான். இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஜடேஜா அந்த போட்டியில் இந்திய அணியின் வளர்ச்சி மற்றும் இந்த தொடரில் ஏற்பட்ட சில தோல்விகள் குறித்தும் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர் “ஒரு சில மோசமான ஆட்டங்களை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம். கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது ஒருசில போட்டிகளில் மோசமான நிலையை சந்தித்துள்ளது.
Also Read: T20 World Cup 2021
இது போன்ற போட்டிகளை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என்றும் இது நியாயமில்லை என்றும் இதற்கான பயணம் மிகவும் பெரியது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now