
'Unlucky' Washington Sundar Re-Injured The Same Area: Tom Moody (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒன்றரை கோடி அடிப்படை விலை கொண்ட வாஷிங்டன் சுந்தரை , 8 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி வாங்கியது.
இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், பேட்டிங்கும் பந்துவீச்சிலும் சும்மா கில்லி மாதிரி செயல்படுவார் என ரசிகர்களும் நம்பினர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் கூட வாஷிங்டன் சுந்தர் தன் திறமையை நிரூபித்தார்.அதற்கு பிறகு உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சரிவை நோக்கி சென்றார். காயம், கரோனா, காயம் என இந்த மூன்று மட்டும் தான் அவர் வாழ்க்கையில் நடந்தது.