
USA beat Nepal by 6 Wickets (Image Source: Google)
ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் 2019 - 2022 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நேபாள்- அமெரிக்க (யுஎஸ்ஏ) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்க முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணி 48 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மல்லா 55 ரன்களைச் சேர்த்தார். அமெரிக்க அணி தரப்பில் கேப்டன் நெத்ரவால்கர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய அமெரிக்க ஸ்டீவன் டெய்லர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக மோனக் படேல், ஜஸ்கர்ன் மல்ஹோத்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.