
United States of America vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸிஸ் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேச அணியும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹஸ்டனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் அமெரிக்க அணி வெற்றிபெற்றால் டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
USA vs BAN: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அமெரிக்கா vs வங்கதேசம்
- இடம் - ப்ரேரி வியூ கிரிக்கெட் வளாகம், ஹூஸ்டன்
- நேரம் - இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)