Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan June 11, 2024 • 13:09 PM
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

United States of America vs India, Match 25 Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் என்பதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

USA vs IND: போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs இந்தியா
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - ஜூன் 12, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

USA vs IND Pitch Report

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையற்ற பவுன்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இது பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிட்சாக இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் நீளமானது என்பதால் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

USA vs IND T20I Head to Head

மோதிய போட்டிகள் - 00

இந்தியா - 00

அமெரிக்கா - 00

USA vs IND: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

United States of America vs India Probable Playing XI

அமெரிக்கா உத்தேச லெவன்: ஸ்டீவன் டெய்லர், மொனாங்க் படேல் (கேப்டன் ), ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்டுஷ் கென்சிகே, சௌரப் நேத்ரவால்கர், அலி கான்.

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே/சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

USA vs IND T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், மொனாங்க் படேல்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆரோன் ஜோன்ஸ்
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஸர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது சிராஜ், சௌரவ் நேத்ராவால்கர், அர்ஷ்தீப் சிங்.

USA vs IND Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match USA vs IND, USA vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, USA vs IND Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of America vs India

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement