
டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு 7.1 ஓவரில் அடித்தால் ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தான் அணியை முந்த முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் துவக்கத்திலிருந்தே இந்திய அணி சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியது.