நான் கடைசி பந்து குறித்து எல்லாம் யோசித்ததே கிடையாது - ரிங்கு சிங்!
இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது என கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை ஏற்றி இருக்கிறது . ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் புள்ளிகளின் பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன . நேற்று நடைபெற்ற 53 வது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின . இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . முதலில் விளையாடிய பஞ்சாப் 181 ரன்கள் எடுத்தது .
கொல்கத்தா அணியில் கேப்டன் நிதிஷ் ரானா ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அவ்வாறு ஆட்டத்தால் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை கைப்பற்றியது . இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது . மீதி இருக்கும் போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும்
Trending
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பேசிய் ரிங்கு சிங், “நான் கடைசி பந்து குறித்து எல்லாம் யோசித்ததே கிடையாது. இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது. பந்து எப்படி வருகிறதோ அந்த பங்திற்கு மரியாதை கொடுத்தே விளையாட நினைக்கிறேன். நிச்சயம் என்னால் போட்டிகளை முடித்துக் கொடுக்கும் திறமை என்னிடம் உள்ளது என்று நம்பி என்னுடைய ஆட்டத்தை விளையாடி வருகிறேன்.
நான் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினாலும் சரி, 6,7 இடத்தில் களமிறங்கினாலும் சரி என்னுடைய பங்களிப்பை சரியாக வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே உன்னிப்பாக உள்ளேன். அதோடு போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க வேண்டும் என்றே நினைக்குறேன். இலக்கு எவ்வளவு என்றாலும் அதனை தொடவே நான் அதே போன்ற வழியிலேயே பயிற்சியையும் செய்து வருவதால் என்னால் போட்டியை முடித்து கொடுக்க முடிகிறது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now