
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை குறிக்கும் வகையில் ஆச்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என்ற மெசேஜுடன் களமிறங்கினார். ஆனால் இதனை பயன்படுத்த கூடாது என்று ஐசிசி அறிவுறுத்தி இருந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது டெஸ்டில் அமைதி புறா ஒன்றை தனது பேட்டில் ஸ்டிக்கராக கவாஜா ஒட்டி பயன்படுத்தி இருந்தார். இதற்கு அவர் ஐசிசி இடம் அனுமதி கேட்க அதற்கு ஐசிசி அனுமதி வழங்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ஐசிசி நயவஞ்சகத்துடன் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல் டெஸ்டில் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடிய உஸ்மான் கவஜா இரண்டாவது டெஸ்டில் ஷூ வில் வேறு ஒரு மெசேஜை எழுதி டிவிஸ்ட் வைத்திருந்தார். அதில் தன்னுடைய இரண்டு மகள்களின் பெயரையும் உஸ்மான் கவஜா எழுதியிருந்தார். தனது சொந்த மகள் பெயரை எழுதி இருந்ததால் ஐசிசியால் எதுவும் செய்ய முடியவில்லை.