
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இரண்டு ரன்களை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தனது பந்துவீச்சு குறித்து பேசிய வருண் சக்ரவர்த்தி, “கடைசியாக நாங்கள் விளையாடிய விக்கெட்டை ஒப்பிடும்போது இது ஒரு நல்ல விக்கெட். ஏனெனில் இன்றைய போட்டியில் பந்து அதிகமாக திரும்பவில்லை.
நான் செய்யக்கூடியது என்னவென்றால், அதை ஸ்டம்ப் லைனில் ஒட்டிக்கொண்டு, பேட்டர் ஏதாவது தவறு செய்யும் வரை காத்திருப்பதுதான். டெத் மற்றும் பவர்பிளேயில் பந்துவீசுவது எனக்குப் பிடிக்கும், இது மிகவும் சவாலானது மற்றும் விக்கெட்டுகளை எடுக்க எனக்கு அதிக வாய்ப்பை அளிக்கிறது. குல்தீப், ஜடேஜா மற்றும் அக்ஸர் ஆகியோருடன் இணைந்து செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.