
Varun Chakravarth Video: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் வ்ருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவார்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 74 ரன்களைச் சேர்த்தார். டிராகன்ஸ் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் அஸ்வின் 36 ரன்களையும், ஷிவம் சிங் 34 ரன்களையும், ஹனி சைனி 35 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணி வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட வருண் சக்ரவர்த்தி சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.