இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடந்து முடிந்தது. இதில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 107 ரன்களையும், அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தன. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்டில் சிமலனே, கேஷவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியானது இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், இந்திய அணிக்காக வரலாற்று சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்த 2 விக்கெட்டுகளுடன் சேர்த்து அவர் இத்தொடரில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இரதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை அவர் தற்சமயம் படைத்துள்ளார்.