
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடைசி நாள் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சொல்லி வைத்து ஒவ்வொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களையும் தூக்கி அசத்தினார்.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம பலத்துடனே இருந்தது. அதாவது முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2ஆவது இன்னிங்ஸில் அவரின் பாட்ஷா பலிக்கவில்லை. அவர்களின் ரன் குவிப்புக்கு முகமது சிராஜ் முட்டுக்கட்டைப்போட்டதால் அந்த அணி 2ஆவது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க திணறுகின்றனர். அப்படி இருக்கையில் பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் நின்றுவிட்டு விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவிடம் வம்பிழுத்தனர்.