
Vengsarkar Picks Suryakumar, 'Best Spinner' Ashwin In India's Playing XI For 4th Test Against Englan (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங் தான். புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய 4 வீரர்களுமே மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிவருவது இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக அமைந்துள்ளது.
மயன்க் அகர்வால், சூர்யகுமார் யாதவ், ஹனுமா விஹாரி போன்ற வீரர்கள் சிலர் பென்ச்சில் உள்ளனர். சீனியாரிட்டியை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஃபார்மின் அடிப்படையில் வீரர்களை ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.