
ஐபிஎல் தொடரின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரராக அசத்தி வருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிராக 41* ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர், மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் ரஜினி, கங்குலியின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் ஐயர் கூறுகையில், “ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு கங்குலி தலைமை தாங்கியதால் அந்த அணியில் பங்குபெறவே முதலில் விரும்பினேன். கேகேஆர் அணி என்னைத் தேர்வு செய்ய ஆர்வமாக இருந்தேன். அதேபோல தேர்வு செய்தார்கள். எனக்கு அது கனவுத் தருணம்.
தாதாவின் (கங்குலி) மிகப்பெரிய ரசிகன் நான். உலகம் முழுக்க அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னுடைய பேட்டிங் திறமையில் கங்குலி முக்கியப் பங்கு வகித்துள்ளார். என்னுடைய சிறுவயதில் வலது கை பேட்ஸ்மேனாகவே இருந்தேன்.