அவருடைய பேட்டிங்கை பார்பதற்கு சூப்பராக இருக்கும் - வெங்கடேஷ் ஐயர்!
பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய வெங்கடேஷ் ஐயர் இந்த தொடர் முடிந்து அவர் பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடரையும் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இருந்தது. இதன் மூலமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்திய அணி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த மூன்று போட்டிகளிலுமே பேட்டிங்கில் தனது மேட்ச் வின்னிங் இன்னிங்சை விளையாடிய வெங்கடேஷ் ஐயர் சூர்யகுமார் யாதவ் உடன் அமைத்த பார்ட்னர்ஷிப் பெரிதளவு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Trending
ஏனெனில் இந்த தொடரின் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது இந்திய அணி 160 ரன்களையாவது அடிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி கடைசி 6 ஓவர்களில் மட்டும் 90 ரன்களுக்கு மேல் குவித்தனர். அது மட்டுமின்றி இந்திய அணி சார்பாக டி20 போட்டியில் கடைசி 5 ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாகவும் இந்த மூன்றாவது போட்டியில் அடிக்கப்பட்ட ரன்கள் அமைந்தது.
அந்த அளவிற்கு சூரியகுமார் யாதவுடன் தனது சிறப்பான பேட்டிங்கை வெங்கடேஷ் ஐயர் வெளிப்படுத்தியிருந்தார். அதோடு பந்துவீச்சிலும் தீபக் சாஹர் துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் காயமடைந்து வெளியேற ஆறாவது பவுலராக இருந்த வெங்கடேஷ் ஐயர் தனது பந்துவீச்சின் மூலம் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இப்படி பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய அவர் இந்த தொடர் முடிந்து அவர் பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி சூர்யகுமார் யாதவ் உடன் பேட்டிங் செய்த வெங்கடேஷ் ஐயர் கூறுகையில் ”என்னுடைய பேட்டிங்கை நான் ரசித்து விளையாடுகிறேன். ஆனால் அதைவிட சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்வதை பார்க்கையில் சூப்பராக இருக்கிறது. அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சி.
ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொள்கிற விதம் மற்றும் அவர் விளையாடுகிற விதத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் லெக் சைடில் அவர் ஆடும் பிக்கப் ஷாட்டுகளை பார்க்கும்போது மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதோடு சூர்யா என்னிடமும் சில ஈசியான ஷாட்டுகளை விளையாட ஐடியாவும் கொடுக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now