
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை ஒன்பது போட்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.எனினும் சிஎஸ்கே அணி இங்கு ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.
விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த அணி இங்கு ஐந்து ஆட்டங்களில் வென்று இருக்கிறது. முதலில் சுப்மன் கில்லை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் ஃபிளெமிங், “ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடுகிறார். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அவரது விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு உருவாக்கும் வல்லமை எங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தொடக்க வீரர்கள் பலமாக இருந்தால் அவர்களை விரைவில் வீழ்த்தி நடுவரிசை வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்வோம்.