VHT2025: மஹாராஷ்டிராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் மஹாராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணிக்கு துருவ் ஷோரே - யாஷ் ரத்தோட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 116 ரன்களில் ஆட்டமிக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துருவ் ஷோரே 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 114 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கருண் நாயர் - ஜித்தேஷ் சர்மா இருவரும் அதிரடியில் மிரட்டியதுடன் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் ஜித்தேஷ் சர்மா 51 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கருண் நாயர் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 88 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 380 ரன்களைக் குவித்தது. மஹாராஷ்டிரா அணி தரப்பில் முகேஷ் சௌத்ரீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய மஹாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குல்கர்னி ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், கேப்டன் ருதுராஜ் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி 27 ரன்களிலும், சித்தேஷ் வீர் 30 ரன்களிலும் என நடையைக் கட்டினர். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த அர்ஷின் குல்கர்னி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோடி சேர்ந்த அங்கித் பாவ்னே - அஸிம் காஸி இணையும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முற்சியில் இறங்கினர். இதில் அஸிம் காஸி 29 ரன்களிலும், அங்கித் பாவ்னே 50 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் நிகில் நாய்க் அதிரடியாக விளையாடி 49 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனால் மஹாராஷ்டிரா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை மட்டுமே சேர்த்தது. விதர்பார் தரப்பில் தர்ஷன் நல்கண்டே, நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் விதர்பா அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now