
VIDEO: Ben Stokes Ready To Make His Comeback, Shares Video Of Batting Practice (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இளம் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினார்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாகவும், ஆஷஸ் தொடர் வெற்றி நாயகனாகவும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கலவரையின்றி ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் உறுதிசெய்தது.