
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12-சுற்றின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக இருந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று தங்களது கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று விளையாடியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷின் அபார ஆட்டத்தால் 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
இந்நிலையில் ஏற்கனவே இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்திருந்தார். இந்த போட்டியில் 12 பந்துகளை சந்தித்த அவர் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.