Advertisement

கேல் ரத்னா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்!

டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 13, 2021 • 18:58 PM
VIDEO: Mithali Raj Becomes First Women Cricketer To Receive 'Khel Ratna' Award
VIDEO: Mithali Raj Becomes First Women Cricketer To Receive 'Khel Ratna' Award (Image Source: Google)
Advertisement

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரா் நீரஜ் சோப்ரா, இந்திய மகளிா் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஹாக்கி அணி கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உள்பட 12 பேருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான தியான்சந்த் கேல் ரத்னா விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற, சிறப்பாகச் செயல்பட்ட வீரா், வீராங்கனைகள் பலரும் இந்த விருது பட்டியலில் இணைந்துள்ளனா். இந்த ஆண்டு விருதுக்கான வெற்றியாளா்களை, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சா்மா தலைமையிலான தோ்வுக் குழு தோ்வு செய்துள்ளது.

Trending


இந்த வெற்றியாளா்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று நடைபெற்றது. தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் கேல் ரத்னா விருதை வாங்கும் முதல் கிரிக்கெட் வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் பெற்றார். 

 

அதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேல் ரத்னா விருது பெற்றவர்கள்: நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவி குமாா் (மல்யுத்தம்), லவ்லினா போா்கோஹெய்ன் (குத்துச்சண்டை), பி.ஆா்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), அவனி லெகாரா (பாரா துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத் (பாரா பாட்மின்டன்), கிருஷ்ணா நாகா் (பாரா பாட்மின்டன்), மணீஷ் நா்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி).

Also Read: T20 World Cup 2021

அா்ஜுனா விருது பெற்றவர்கள்: அவிந்தா் சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கௌா் (பாக்ஸிங்), ஷிகா் தவன் (கிரிக்கெட்), சி.ஏ.பவானி தேவி (வாள்வீச்சு), மோனிகா (ஹாக்கி), வந்தனா கட்டாரியா (ஹாக்கி), சந்தீப் நா்வால் (கபடி), ஹிமானி உத்தம் பரப் (மல்லா் கம்பம்), அபிஷேக் வா்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் புனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங் (ஹாக்கி), ஹா்மன்பிரீத் சிங் (ஹாக்கி), ரூபிந்தா் பால் சிங் (ஹாக்கி), சுரேந்தா் குமாா் (ஹாக்கி), அமித் ரோஹிதாஸ் (ஹாக்கி), வீரேந்திர லக்ரா (ஹாக்கி), சுமித் (ஹாக்கி), நீலகண்ட சா்மா (ஹாக்கி), ஹாா்திக் சிங் (ஹாக்கி), விவேக் சாகா் பிரசாத் (ஹாக்கி), குா்ஜந்த் சிங் (ஹாக்கி), மன்தீப் சிங் (ஹாக்கி), ஷம்ஷோ் சிங் (ஹாக்கி), லலித் குமாா் உபாத்யாய் (ஹாக்கி), வருண் குமாா் (ஹாக்கி), சிம்ரன்ஜீத் சிங் (ஹாக்கி), யோகேஷ் கதுனியா (பாரா தடகளம்), நிஷாத் குமாா் (பாரா தடகளம்), பிரவீண் குமாா் (பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பாட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாரா துப்பாக்கி சுடுதல்), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹா்விந்தா் சிங் (பாரா வில்வித்தை), சரத் குமாா் (பாரா தடகளம்).

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
Advertisement