இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் பூனம் ராவத்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது போட்டி நடுவர் அவுட் இல்லை என்று கூறியும், பூனம் ராவத் களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகரலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்றுவருகிறது.
இதில் முதல் பேட்டிங் செய்துவரும் இந்திய மகளிர், இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களைச் சேர்த்துள்ளது.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய வீராங்கனை பூனம் ராவத் 36 ரன்களை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போட்டியில் போட்டியின் 81ஆவது ஓவரை வீசிய மொலினெக்ஸ் வீசினார்.
அப்போது பூனம் ராவத் பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக போட்டி நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். ஆனாலும் பூனம் ராவத் களத்தை விட்டு வெளியேறினார்.
Unbelievable scenes
— cricket.com.au (@cricketcomau) October 1, 2021
Punam Raut is given not out, but the Indian No.3 walks! #AUSvIND | @CommBank pic.twitter.com/xfAMsfC9s1
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
போட்டி நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தும், பூனம் ராவத் களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now