நடுவருடன் மல்லுக்கட்டிய அஸ்வின் - வைரல் காணொளி
இந்தியா - நியூசிலாந்து போட்டியின் போது பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியானது தற்போது மூன்றாவது நாளை எட்டியுள்ளது. முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 345 ரன்கள் குவிக்க அடுத்ததாக நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் விளையாடி வந்த நியூஸிலாந்து அணி தற்போது 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்படி இன்றைய போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த அஷ்வின் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அம்பயரின் அருகில் அவரது பார்வையை மறைக்கும் அளவிற்கு ஓடிவந்து பந்துவீசிய அவர் பந்து வீசிய பிறகு நான்ஸ்ட்ரைக்கர் நிற்கும் திசை நோக்கி ஓடினார்.
Trending
அவ்வாறு ஓடுவது நான் ஸ்டிக்கரை தொந்தரவு செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி நடுவர் அஸ்வினை அதுபோன்று பந்துவீச கூடாது என்று கூறினார். இதனால் அதிர்ப்தி அடைந்த அஸ்வின் நான் ஏற்கனவே இதே போன்ற முறையில் பந்துவீசி பயிற்சி எடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி போட்டியின் நடுவர் இடமும் இதுகுறித்து எனது சந்தேகங்களை கேட்டேன். இதில் எந்தவித தவறும் இல்லை என்று போட்டியின் நடுவர் கூறிவிட்டதாகவும் மேலும் கிரிக்கெட் விதிகளின்படியே தான் பந்து வீசுவதாக நிதின் மேனன் உடன் அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனை கவனித்த கேப்டன் ரஹானேவும் அம்பயரிடம் சென்று அஸ்வின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசுவதாகவும், டேஞ்சர் ஏரியாவில் அவர் செல்லவில்லை பந்து வீசி விட்டு சரியான அளவில்தான் ஓடுகிறார் என்று முறையிட்டார். அஸ்வின் மற்றும் நிதின் மேனன் ஆகியோரது விவாதம் அந்த ஓவர் முடிந்து இடைவெளியிலும் தொடர்ந்து நடைபெற்றது.
தொடர்ச்சியாக அஸ்வின் மற்றும் நிதின் மேனன் ஆகியோர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அஸ்வின் தற்போது தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இவர்களது இந்த காரசாரமான விவாதம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now