விஜய் ஹசாரே கோப்பை: பரோடாவிடம் படுமட்டமாக தோற்ற தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்று போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதினர்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி தமிழ்நாடு பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Trending
இதனால் 39 ஓவர்களிலேயே பரோடா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்னால் பாண்டியா 38 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து எளிய இலக்கு தானே என நினைத்து தமிழ்நாடு அணி பேட்டிங்கில் சில மாற்றத்தை செய்தது. அதன்படி சந்தீப் வாரியரை தொடக்க வீரராக களமிறக்கியது.
ஆனால் சந்தீப் வாரியர் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, தமிழ்நாடு அணியின் வியூகம் ஆட்டம் கண்டது. அதன்பின் சூதாரித்து எப்போதும் போல களமிறங்கிய தமிழ்நாடு அணியில் ஹரி நிஷாந்த், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், இந்திரஜித், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என களமிறங்கிய அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
பின் அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் - ஷாருக் கான் இணை அணியை தோல்வியிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களும் பெயருக்கு ஒரு சில பவுண்டரிகளை விளாசியதோடு நடையைக் கட்டினர்.
இதனால் 20.2 ஓவர்களிலேயே தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. பரோடா அணி தரப்பில் பார்கவ் பாட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழ்நாடு அணிக்கு தக்க பாடத்தைப் புகட்டியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now