Advertisement

விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!

கர்நாடக அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Vijay Hazare Trophy 2021-22: Tamil Nadu won by 151 runs & Qualified to Semi Final 2
Vijay Hazare Trophy 2021-22: Tamil Nadu won by 151 runs & Qualified to Semi Final 2 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 21, 2021 • 05:01 PM

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 21, 2021 • 05:01 PM

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி ஜெகதீசன், சாய் கிஷோர், ஷாருக் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டம் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 354 ரன்களைக் குவித்தது.

Trending

இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்களையும், ஷாருக் கான் 79 ரன்களையும், சாய் கிஷோர் 61 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய கர்நாடக அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஸ்ரீநிவாஸ் சர்த் மட்டும் பொறுப்புடன் விளையாடி 43 ரன்களை எடுத்தார். 

இதனால் 39 ஓவர்களிலேயே கர்நாடக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்தத். தமிழ்நாடு அணி தரப்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், விஜய் ஹசாரே கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement