Advertisement
Advertisement
Advertisement

விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; அஸாம் அணிக்கு 351 டார்கெட்!

விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணிக்கு எதிராகச் சதமடித்து அசத்தியுள்ளார் மஹாராஷ்டிர அணியின் கேப்ட்ன் ருதுராஜ் கெயிக்வாட்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 30, 2022 • 13:58 PM
Vijay Hazare Trophy: Ruturaj Gaikwad continues sensational 2022 form, smashes 168 in semi-final vs A
Vijay Hazare Trophy: Ruturaj Gaikwad continues sensational 2022 form, smashes 168 in semi-final vs A (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா - அஸாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் அபாரமாக விளையாடினார்.

Trending


இன்றைய போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 126 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் எடுத்து 45ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அணிக்கு அன்கித் பாவ்னே, 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். இதனால் மஹாராஷ்டிர அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. அஸாம் அணி தரப்பில் முக்தா உசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 9 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 6 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ். அதன் விவரங்கள்:

  • 136 vs மத்தியப் பிரதேசம்
  • 154* vs சத்தீஸ்கர் 
  • 124 vs கேரளம் 
  • 21 vs உத்தரகண்ட் 
  • 168 vs சண்டிகர் 
  • 124* vs ரெயில்வே 
  • 40 vs பெங்கால் 
  • 220* vs உத்தரப் பிரதேசம்
  • 168 vs அஸ்ஸாம் (இன்று)


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement