
Vijay Hazare Trophy: Saurashtra set a target of 311 for Tamil Nadu (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய சவுராஷ்டிரா அணியில் ஹர்விக் தேசாய் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த விஷ்வராஜ் ஜடேஜா - ஷெல்டன் ஜாக்சன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் விஷ்வராஜ் 52 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் இர்ந்த ஷெல்டன் ஜாக்சன் சதமடித்து அசத்தினார். பின்னர் 134 ரன்களில் ஜாக்சன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அர்பிட் வசவடா தனது பங்கிற்கு 57 ரன்களைச் சேர்த்தார்.